யாருயா நீ.. திருடிய நகைகளை விற்று ஆதரவற்றோருக்கு உதவிய கொள்ளையன்

Chennai Crime
By Sumathi Nov 17, 2022 10:21 AM GMT
Report

திருடிய நகைகளை விற்று, கொள்ளையன் ஆதரவற்றோருக்கு உதவிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நகை திருட்டு 

சென்னை, புதுபெருங்களத்தூரைச் சேர்ந்தவர் வரதராஜன். இவரது வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

யாருயா நீ.. திருடிய நகைகளை விற்று ஆதரவற்றோருக்கு உதவிய கொள்ளையன் | Robber Giving Food To Destitute In Chennai

அப்போது, வீட்டில் கொள்ளையடித்துச் சென்றது தனிநபர் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், சென்னை எழுப்பூர் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் அன்புராஜ் என்ற அப்பு(33) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

உதவிய திருடன் 

அதனைத் தொடர்ந்து விசாரணையில், கடந்த 10 ஆண்டுகளாக மாதம் 1 முறை மட்டும் புறநகர் பகுதிக்கு மின்சார ரயில்களில் வந்து மாதம் ஒரு வீடு என திருட்டில் ஈடுபட்டுள்ளார். அதே போலவே, பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதத்தில் 4 வீடுகளில் கொள்ளையடித்துள்ளார்.

திருடிய நகைகளை விற்று அதில் கிடைத்த பணத்தை அங்கு சாலையோரம் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.

இதனால் தனக்கு சிறைக்கு செல்வதில் எந்த ஒரு கவலையும் இல்லை என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அதனையடுத்து அவரிடம் இருந்த 11 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்துள்ளனர்.