தனியாளாக கத்தியுடன் வந்த கொள்ளையனை ஓடவிட்ட பெண் வங்கி மேலாளர் - தரமான சம்பவம்!
கொள்ளையடிக்க வந்த நபரை பெண் மேலாளர் எதிர்த்து சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி கொள்ளை
ராஜஸ்தான், ஸ்ரீகங்கனார் பகுதியில் மருதாரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வங்கி வழக்கம் போல செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் திடீரென ஆவேசமாக வங்கிக்குள் வந்து கத்தியை காட்டி மிரட்ட தொடங்கியுள்ளான்.
வங்கியில் அதிக மக்கள் நடமாட்டம் இல்லாததால் இந்த சம்பவம் வெளியில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இதனால், வங்கி மேலாளர் பூனம் குப்தா வந்து பார்க்கையில், கொள்ளையனை தடுக்க முயன்றுள்ளார்.
எதிர்த்த மேலாளர்
ஆனால் அவர் பையில் பணம் நிரப்புமாறு மிரட்டியுள்ளான். தொடர்ந்து அவனுடைய பேன்ட் பாக்கெட்டிலிருந்து கட்டிங் பிளேடு கீழே விழுந்துள்ளது. உடனே பூனம் அதை எடுத்துக்கொண்டு தாக்க முயன்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, வங்கி பணியாளர்களும் ஒன்று கூடி விரட்டியுள்ளனர். அதன்பின் அனைவரும் சேர்ந்து அவனை பிடிக்க நெருங்கையில், கொள்ளையன் தப்பித்து ஓடுயுள்ளார். தொடர்ந்து சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதனையடுத்த விசாரணையில், 29 வயதான லாவிஷ்தான் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து லாவிஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக வெளியான சிசிடிவி காட்சியில், வங்கி பெண் மேலாளர் ஆயுதம் இன்றி எதிர்த்து சண்டையிட்ட சம்பவம் வைரலானது.