விடுதி பெண்கள் குளிப்பதை ஆண் நண்பருக்கு செல்போனில் அனுப்பிய மாணவி - பகீர் சம்பவம்

Tamil nadu Crime Ramanathapuram
By Sumathi Sep 25, 2022 12:02 PM GMT
Report

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு, மாணவி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவி

ராமநாதபுரம், கமுதியைச் சேர்ந்தவர் ஆசிக் (வயது 31). இவர் கிளினிக் நடத்தி வருகிறார். ஆசிக்கிற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது கிளினிக் அருகேயுள்ள காளீஸ்வரி என்பவர் மதுரை அண்ணாநகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி, பி.எட்., படித்து வருகிறார்.

விடுதி பெண்கள் குளிப்பதை ஆண் நண்பருக்கு செல்போனில் அனுப்பிய மாணவி - பகீர் சம்பவம் | Woman Arrested For Sharing Bath Of Hostel Girls

ஆசிக்கும், காளீஸ்வரியும் நீண்ட நாட்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில், காளீஸ்வரி தன்னுடன் தங்கியுள்ள விடுதி பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் பிடித்து ஆசிக்கிற்கு அனுப்பிவந்துள்ளார்.

என்ன நடந்தது?

மேலும் பெண்கள் உடை மாற்றும் காட்சிகள் மற்றும் புகைப்படங்களையும் அனுப்பி வைத்துள்ளார். இது குறித்து தெரியவந்ததும் பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் காளீஸ்வரியின் செல்பேனை பார்த்தபோது இந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது.

விடுதி பெண்கள் குளிப்பதை ஆண் நண்பருக்கு செல்போனில் அனுப்பிய மாணவி - பகீர் சம்பவம் | Woman Arrested For Sharing Bath Of Hostel Girls

இதையடுத்து, விடுதியின் மேலாளர் மதுரை அண்ணாநகர் காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியதில்

செல்போனில் பெண்கள் குளியல் காட்சிகள் மற்றும் உடைமாற்றும் காட்சிகள் பகிரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிக் மற்றும் காளீஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.