சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
உரிய காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசுகையில்,
மாநில வளர்ச்சிக்கு சீரான சாலைகளும், மேம்பாலங்களும் அடிப்படை தேவையாக உள்ளன; தொய்வில்லா நிர்வாகத்தை ஏற்படுத்த தொடர் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உரிய காலத்திற்குள் சாலை பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாலைகள் சீராக உள்ளதற்கு ஆய்வு கூட்டங்கள் தான் காரணமாக உள்ளன.
சென்னையில் உள்ள சாலைகள் அரசின் சாதனைகளாக உள்ளன. திட்டங்களின் நிலை குறித்து அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு நிலம் கையகப்படுத்துவது, போக்குவரத்து வசதி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளில் தொழில் முதலீடுகள் குவிந்த வண்ணம் உள்ளது என தெரிவித்துள்ளார்.