மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Government of Tamil Nadu Mamata Banerjee
By Thahir Jun 28, 2023 03:01 AM GMT
Report

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட் செய்துள்ளார்.

முதலமைச்சர் மம்தா பானர்ஜி காயம் 

மேற்கு வங்க மாநிலத்தில் ஜுலை 8ம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு 2 நாள் பயணமாக மம்தா பானர்ஜி சென்றார்.

பின்னர் ஜல்பைகுரியில் இருந்து கொல்கத்தா செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது கனமழை பெய்ததால் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

பைகுந்தபூர் வனப்பகுதியில் பறந்து கொண்டிருந்த போது கனமழை காரணமாக ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் அருகில் உள்ள அரசு மதருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் இடது முழங்கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் இருப்பதை கண்டறிந்தனர்.

May Mamata Banerjee get well soon M. K. Stalin

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். வீட்டில் இருந்து அவர் சிகிச்சை எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட் 

இந்த நிலையில் மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

May Mamata Banerjee get well soon M. K. Stalin

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், "ஹெலிகாப்டர் திடீரென அவசரமாக தரையிறங்கியதில் காயம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தாவின் உடல்நிலை குறித்து கவலைப்படுகிறேன்.

அவர் விரைவில் குணமடையவும், விரைவில் நலமுடன் திரும்பி வரவும் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.