தினமும் 2 முறை நீருக்கடியில் மறையும் சாலை - அதிசயம் ஆனால் உண்மை!
சாலை ஒன்று ஒரு நாளைக்கு இரண்டு முறை தண்ணீருக்கு அடியில் மறைகிறது.
பிரபல சாலை
பிரான்சில் பிரபலமான சாலையாக அறியப்படுவது பாஸேஜ் டு கோயிஸ். இந்த சாலை வினோதமான இயற்கை நிகழ்வுக்கு பெயர் போனது. 4.15 கிமீ நீளமுள்ள இந்த சாலை ஒரு நாளில் இரண்டு முறை தண்ணீருக்கு அடியில் மறைகிறது. இதனை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த அதிசய சாலை பர்ன்யோஃப் வளைகுடாவை நோயர்மூட்டியர் தீவுடன் இணைகிறது. இது மிகவும் ஆபத்தானதாகவும் பார்க்கப்படுகிறது. அதிக அலையின் காரணமாக, சாலை கிட்டத்தட்ட 13 அடி தண்ணீருக்கு அடியில் மறைகிறது.
வினோத நிகழ்வு
எனவே, சாலையில் செல்லும் ஓட்டுநர்கள், கண்ணுக்குத் தெரியாத அலை குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மக்கள் பல மணி நேரம் சாலையில் தவிக்கின்றனர்.
அதற்காக உயரமான கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நீர்வரத்து குறைந்தவுடன், சாலையில் கடல் பாசி படர்ந்து, நடந்து செல்வதற்கும் சிரமமாக உள்ளதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.