முடிவடைந்த பதவிக்காலம்...திடீரென டெல்லி புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது.
ஆர்.என்.ரவி
2021-ஆம் ஆண்டு தமிழகத்திற்கு ஆளுநராக வந்தார் ஆர்.என்.ரவி. அதற்கு முன்னர் அவர், இரண்டு ஆண்டுகள் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ஆளுநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் தேர்தல் நடைபெற 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில், ஆளுநரின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வினவிய போது, தான் ஜனாதிபதி அல்ல என கூறி சென்றார்.
நேற்றுடன் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அதே நேரத்தில் அவர், அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி விரைந்துள்ளார்.
பதவிக்காலம்
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அவரது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் டெல்லி சென்றுள்ளார்கள்.
ஆளுநர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர், அதனை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.
4 நாட்கள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், வரும் ஞாயிறு மாலை சென்னை திரும்பவுள்ளார்.