நேரில் சென்று கேட்பதால் முதலீடுகள் வராது - முதல்வர் குறித்து கவர்னர் நேரடி பேச்சு!
முதல்வர் சமீபத்தில் சென்ற வெளிநாட்டு பயணம் குறித்து கவர்னர் ஆர்.என்.ரவி மேடையில் பேசியுள்ளார்.
நிகழ்ச்சி
உதகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமையில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.
இதில் பேசிய கவர்னர், ”நாம் நேரில் சென்று தொழில் அதிபர்களிடம் கேட்பதாலோ முதலீடுகள் வராது.
உலகளாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு சிறந்த சூழலை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை சிறிய மாநிலமான ஹரியானா ஈர்த்து வருகிறது.
முதலில் தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும்" என்று கூறினார்.
நேரடி பேட்டி
இதனை தொடர்ந்து, அவர் நிகழ்ச்சியில் பேசுகையில், "முதலீடுகளை ஈர்க்கும் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாகும்.
அப்பொழுதுதான் நாம் இந்த வாய்ப்பினை சரிவர பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியில் 70 விழுக்காடு இந்திய மொழிகள் சார்ந்த துறைகளில் இருந்து வருகிறது.
பல்துறை திறன்களை வழங்குவதன் மூலம் காலத்திற்கு பொருத்தமான கல்வியை தருவதே புதிய கல்விக் கொள்கையாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தமிழக முதலமைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக பொணம் மேற்கொண்டார், இதனை குறிப்பிட்டு இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாக தெரிகிறது.