தமிழ்நாட்டில் கல்வி முறையினை மாற்ற வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி
R. N. Ravi
By Irumporai
2 years ago
கல்வி முறையினை காலத்திற்கேற்ப மாற்ற வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்கள் மாநாடு
உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் 2 நாள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து மற்றும் பாரதியார் பாடலுடன் துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது.
கல்வி முறையினை மாற்ற வேண்டும்
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழகத்தில் கல்வி முறையினை மாற்ற வேண்டும் எனக் கூறினார் , மேலும் இளைஞர்களின் திறன் காலத்திற்கு ஏற்ப மாற்ற வேண்டும் பிற மாநிலங்கள் தமிழகத்துடன் போட்டி போடும் அளவிறகு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.