நாய் கறி சாப்பிடுறவங்களா..? ஆர்.எஸ்.பாரதி பேச்சு..!! ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம்!!
திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்,எஸ்.பாரதியின் கருத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் கண்டனம்
திமுகவிற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் கடும் மோதல் போக்குகள் நீடித்து வருகின்றது. சட்டமன்றம் வரை எதிரொலித்த இவர்களின் மோதல் போக்கு தற்போது நீதிமன்ற படிகளை ஏறியுள்ளது. இதற்கிடையில் தான், தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜபவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "நாகாக்கள் தைரியமான, நேர்மையான மற்றும் கண்ணியமான மக்கள். தி.மு.க.வின் மூத்த தலைவர் திரு.ஆர்.எஸ்.பாரதி அவர்களை ‘நாய் தின்பவர்கள்’ என்று பகிரங்கமாக திட்டுவது கேவலமானது, ஏற்றுக்கொள்ள முடியாதது.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் தமிழகம் - கேரளா அரசுகள்..!! மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு !!
ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை புண்படுத்த வேண்டாம் என்று பாரதியிடம் கேட்டுக்கொள்கிறேன்.'' என ஆர்.என்.ரவி கண்டனம் தெரிவித்திருப்பது வெளியிடப்பட்டுள்ளது.
“Nagas are brave, honest and dignified people. Thiru R S Bharathi a senior DMK leader publicly insulting them as ‘Dog eaters’ is scurrilous and unacceptable. I urge Mr Bharathi not to hurt a community of which the whole of India is proud.”-Governor Ravi
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) November 5, 2023