சுதந்திரம் அடைந்த பிறகு தான் படிப்பறிவு குறைந்து விட்டது - ஆளுநர் ஆர்.என்.ரவி!!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.
படிப்பறிவு குறைந்த...
அவர் பேசியது வருமாறு, நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம், பொருளாதாரம், கல்வி நிறுவனங்கள் போன்றவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிட்டு, 200 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக இருந்ததாக மாணவர்களிடத்தில் சுட்டிக்காட்டினார்.
நம்முடைய கல்வியமைப்பை மாற்றி ஆங்கிலேயர்கள் அவர்களின் கல்வி திட்டத்தை புகுத்தினார்கள் என்றும் சுதந்திரம் அடைந்த பிறகு தான் இந்தியா படிப்பறிவு குறைந்த நாடாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.
பாடங்களில் ஆன்மிகம்
தற்போதைய காலகட்டத்தில் கல்லூரிகள் வணிக நோக்கத்திற்காக மட்டுமே துவங்கப்படுவதாக விமர்சித்து, ஒரு பேராசிரியர் 30 கல்லூரிகளில் பணியாற்றுவது நிலை இருக்கிறது என்றும் அவ்வாறு இருக்கும் சூழலில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்? என கேள்வி எழுப்பினார்.
ஆன்மீகத்தின் தலைநகரமாக தமிழகம் இருந்ததாகவும், திராவிட மண்ணில் தான் பக்தி இயக்கங்கள் தோன்றியதாக நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி, திருவாசகம் போன்ற பக்தி இலக்கிய பாடங்கள் கல்லூரி, பள்ளிகளில் இடம்பெற வேண்டும் என்று தெரிவித்தார்.
கல்வியோடு சேர்ந்து பக்தி இலக்கியங்களும் இருக்க வேண்டும் என்ற ஆளுநர், அது தான் வேர் என்றும் சிறிய பிள்ளைகளுக்கு கல்வியோடு சேர்த்து கலாச்சாரம், பக்தி இலக்கியங்களையும் சேர்த்து கற்றுத்தர வேண்டும் என கூறினார்.