சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை பண்றாங்க - தமிழக அரசை சாடிய ஆளுநர்!
சிறுமிகளுக்கு கட்டாய கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு ஆளுநர் ரவி அண்மையில் அளித்திருந்த பேட்டியில், ”பழிவாங்கும் வகையில், சமூக நலத்துறையின் அரசு அதிகாரிகள், பொது தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர். அங்கே குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக எட்டு பேர் மீது புகார்களை அளித்தனர்.
தீட்சிதர்கள் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் என புகார் கூறினர். ஆனால் அங்கே அத்தகைய திருமணங்கள் நடக்கவில்லை. அது உண்மை இல்லை. பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கன்னித்தன்மை சோதனை?
மேலும், ஆறாம், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை, வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, 'இரண்டு விரல் பரிசோதனை' என்னும் கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த கொடுமைகளால் அந்த சிறுமிகள் சிலர் தற்கொலைக்கு முயன்றனர்.
இது என்ன என்று முதல்வருக்கு நான் விளக்கம் கேட்டு கடிதம் எழுதினேன்” எனத் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், கட்டாய கன்னித்தன்மை பரிசோதனை விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.