ஆருத்ரா மோசடி..போலீசாரின் விசாரணை - ஆர்.கே.சுரேஷின் பரபரப்பு வாக்குமூலம்..!!
ஆருத்ரா மோசடி விவகாரத்தின் விசாரணையில், நேற்று நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராகியுள்ளார்.
நேரில் ஆஜர்
ஆருத்ரா மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும் படி, தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நீண்ட நாள் தலைமறைவிற்கு பிறகு நாளை ஆஜராகினார். அவரிடம் சுமார் 7 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் விசாரணையின் போது ஆர்.கே.சுரேஷ் கொடுத்த வாக்குமூலங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது "வைட் ரைஸ்" என்ற படத்திற்காக ஆருத்ரா மோசடியில் கைதான அந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரூசோவிடம் பணம் பெற்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
பரபரப்பு வாக்குமூலம்
அதே போல, வங்கி பணப்பரிவர்த்தனை மட்டுமில்லாமல் நேரிலும் ரூசோவிடம் பணம் பெற்றதாகவும், பெற்ற பணத்தை படத்திற்காக மட்டுமின்றி தனது சொந்த செலவிற்கும் பயன்படுதியாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக ஆருத்ரா மோசடியில் சுமார் ரூ.2,438 கோடி வரை ஏமாற்றமடைந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இந்த வழக்குத் தொடர்பாக அந்த நிறுவனத்துக்கு சொந்தமான வங்கி கணக்குகளில் இருந்த ரூ.96 கோடி வரை முடக்கப்பட்டது. மேலும், ஆருத்ரா நிறுவனத்துக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள 125-க்கும் அதிகமான சொத்துகளும் முடக்கப்பட்டன.