பிளீச்சிங் பவுடர் இல்லை மைதா மாவு..? பணியாளர்களின் விளக்கம்..அதிர்ச்சியடைந்த மக்கள்..!!
சுகாதாரபணியின் போது, பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக மைதா மாவை தூவியதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுகாதாரப்பணிகள்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாங் புயலின் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்தன. அரசு மீட்புப்பணிகளை மும்முரப்படுத்தி, வெள்ள நீரை வெளியேற்றிய நிலையில், தற்போது சுகாதர பணிகள் நடைபெற்று வருகின்றது.
பல இடங்களில் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து ஆங்காங்கே குவிந்த குப்பைகளை அகற்றி அதனை தொடர்ந்து அங்கு பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மைதாவா..?
இந்த நிலையில், சென்னையை அடுத்த செங்குன்றம் டாக்டர் வைத்தீஸ்வரன் தெருவிலும் சுகாதர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால், அங்கே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றுவட்டாரங்களில் தூவப்பட்ட பிளீச்சிங் பவுடர் மீது அப்பகுதி மக்களுக்கு ஏதோ சந்தேகம் ஏற்பட, தூவப்பட்ட பிளீச்சிங் பவுடரை பொதுமக்கள் சோதித்துள்ளனர்.
அப்போது தான், அது மைதா மாவு என்பது தெரியவந்ததுள்ளது.
இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட பணியாளர்களிடம் இது குறித்து வினவிய போது, அதிகாரிகள் கொடுத்த ப்ளீச்சிங் பவுடரை தான் தூவி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் தானாக நடைபெற்றதா..? அல்லது அதிகாரிகளின் அலட்சியமா என்பது இன்னும் தெளிவாகாத நிலையில், இதனை இணையதளவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.