வாய்ப்பு இல்லையா? கொந்தளித்த நடிகை ரித்திகா - என்ன சொன்னார் தெரியுமா?

Ritika Singh Tamil Cinema
By Sumathi Mar 09, 2024 05:30 PM GMT
Report

படவாய்ப்பு குறித்த கேள்விக்கு ரித்திகா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை ரித்திகா

மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு எண்ட்ரி கொடுத்தவர் நடிகை ரித்திகா சிங். அதன்பின் ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை என சில படங்கள் நடித்தார்.

actress ritika singh

அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக கொலை படத்தில் நடித்திருந்தார். துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கோதா படத்தின் "கலாட்டாக்காரன்" பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆடி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

திருமணமாகி 1 வருஷம்; நல்ல செய்தி சொன்ன ரித்திகா - குவியும் வாழ்த்துகள்!

திருமணமாகி 1 வருஷம்; நல்ல செய்தி சொன்ன ரித்திகா - குவியும் வாழ்த்துகள்!



படவாய்ப்பு

தற்போது, நடித்து வரும் வளரி படத்துக்காகத் தான் சிலம்பம் உள்ளிட்ட கலைகளை பயின்று வரும் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தொடர்ந்து, வொர்க் அவுட்டில் தீவிரமாக களமிறங்கி அதுதொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது பகிர்வார். அது ரசிகர்களிடயே வைரலாகுவது வழக்கம். 

வாய்ப்பு இல்லையா? கொந்தளித்த நடிகை ரித்திகா - என்ன சொன்னார் தெரியுமா? | Ritika Singh Angry About Movie Opportunities

இந்நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, ரித்திகாவிடம் தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை. பட வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லையா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என் மனதிற்கு பிடித்திருந்தால் மட்டும் படத்தில் நடிப்பேன்.

எந்த சூழ்நிலையிலும் வேண்டாத படத்தில் நடிக்க மாட்டேன். மலையாளம், இந்தி, மராத்தி மொழி எந்த மொழியாக இருந்தாலும் கதை பிடித்திருந்தால் நடிப்பேன். அதுவும் படத்தில் இருக்கும் ரோல் சரியான முறையில் அமைந்தால் அந்த கேரக்டரில் நடிக்க ஓகே சொல்வேன் என காட்டமாக பதிலளித்துள்ளார்.