பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய முக்கிய நடிகை - இப்படி ஒரு காரணமா? ரசிகர்கள் ஷாக்!

Serials
By Sumathi Aug 21, 2023 05:30 PM GMT
Report

 பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்துவரும் ஒருவர் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரித்திகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வருபவர் ரித்திகா. இதற்கு முன்னதாக தொகுப்பாளராகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமானார்.

பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய முக்கிய நடிகை - இப்படி ஒரு காரணமா? ரசிகர்கள் ஷாக்! | Rithika Out From Vijay Tvs Baakiyalakshmi Serial

அப்போது பாலாவுடன் இவர் பழகி வந்ததை காதல் என கிசு கிசுக்கப்பட்டது. தொடர்ந்து, விஜய் டிவியில் கிரியேட்டிவ் டைரக்டராக இருக்கும் வினு என்ற நபரை திருமணம் செய்துக் கொண்டார்.

விலகல் 

இந்நிலையில், ரித்திகா சீரியலில் இருந்து விலகியுள்ளது ரசிகர்களுக்கு ஷாக் அளித்துள்ளது. அவருக்கு பதிலாக காற்றுக்கென்ன வேலி தொடரில் நடித்துவரும் அக்ஷிதா அசோக் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கியலட்சுமி சீரியலில் விலகிய முக்கிய நடிகை - இப்படி ஒரு காரணமா? ரசிகர்கள் ஷாக்! | Rithika Out From Vijay Tvs Baakiyalakshmi Serial

இந்த சீரியலில் அமிர்தாவின் கேரக்டர் நெகட்டிவாக மாறும் என்று ஏற்கனவே கோபி கேரக்டரில் நடிக்கும் நடிகர் சதீஷ் கூறியிருந்தார். அந்த வகையில் நெகட்டிவ் கேரக்டர் நமக்கு செட்டாகாது என்று அதனால் தான் ரித்திகா விலகி விட்டாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.