அச்சுறுத்தும் கொரோனா; தமிழகத்தில் இவ்வளவு பாதிப்பா? எகிறும் பலி எண்ணிக்கை!

COVID-19 Tamil nadu Death
By Sumathi Jan 02, 2024 09:24 AM GMT
Report

தமிழகத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொரோனா தொற்று

கோவா, மகாராஷ்டிரம், கர்நாடகம், தெலங்கானா, கேரளத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜேஎன்1 வகை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

covid 19 cases

அதனைத் தொடர்ந்து, மாநில அரசுகளுக்கு பல்வேறுஅறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத் துறை வழங்கி வருகிறது. தினமும் 350-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உலுக்கும் கொரோனா; அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - பொது சுகாதாரத் துறை

உலுக்கும் கொரோனா; அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் - பொது சுகாதாரத் துறை

3 பேர் பலி

தமிழ்நாட்டில் நேற்று 490 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்தவகையில், சென்னை மாவட்டத்தில் 10 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 பேருக்கும், கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona death report

ஒரு மாதத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. எனவே, கட்டாயமாக வெளி இடங்களுக்கு செல்லும் போது மாஸ்க் அணியாமல் செல்ல வேண்டாம் எனவும், முடிந்த வரை சமூக இடைவெளியை பின்பற்றும்படி சுகாதாரத்துறை வலியுறுத்தியுள்ளது.