தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பிரதமர் - கவனம் பெற்ற முதுகு பை!
தேர்தல் பிரசாரத்தில் ரிஷி சுனக்கின் முதுகு பை கவனம் பெற்றுள்ளது.
ரிஷி சுனக்
இங்கிலாந்தில் ஜூலை 4-ந்தேதி பொது தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி பிரதமர் ரிஷிசுனக் நாடு முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அதன்படி, ரிஷிசுனக் சமீபத்தில் லண்டனில் இருந்து கார்ன்வால் வரை செல்லும் ஸ்லீப்பர் ரெயிலில் பயணம் செய்தார். அப்போது, அவர் அணிந்திருந்த 'முதுகு பை' அனைவரது கவனம் ஈர்த்துள்ளது.]
பையால் கிளம்பிய சர்ச்சை
அந்த தோள்பையின் மதிப்பு 750 பவுண்டு (இந்திய மத்திப்பில் தோராயமாக ரூ.79,497). 'RS' என்ற தனது பெயரின் முதல் எழுத்துக்கள் கொண்ட ஒரு ஆடம்பர பையை எடுத்துச் சென்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மேலும் அந்த பேக் டுமி அரைவ் பிராட்லி மாடல் என்றுத் தெரிகிறது. பிரசாரத்திற்காக நாட்டின் ஏழ்மையான பகுதிக்கு சென்ற போது விலை உயர்ந்த பையுடன் ரிஷிசுனக் சென்றது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரிஷி சுனக் - அக்ஷதா மூர்த்தி தம்பதியின் சொத்து மதிப்பு 120 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.