ரிஷி சுனக் இந்தியரே இல்லை - பரபரப்பை கிளப்பிய பாஜக மூத்த தலைவர்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குறித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்
42 வயதான ரிஷி சுனக் தான் பிரிட்டனில் மிகக் குறைந்த வயதில் பிரதமர் ஆனவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். அங்கு இந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு வருவதும் இதுவே முதல்முறை. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் இந்தியர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ரிஷி சுனக்கின் குடும்பம் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு குடிபெயர்ந்து விட்டதாகவும் அவர் முற்றிலும் பிரிட்டிஷ் குடிமகன். அதேநேரம் அவர் இந்து என்பதால் அது சாதகமாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.
பிரிட்டிஷ் குடிமகன்
இது குறித்து அவர் தனது ட்விட்டரில், "இங்கிலாந்தின் பிரதமராக, ரிஷி சுனக்கிற்கு ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனென்றால் இக்கட்டான நிலையில் உள்ள நாட்டின் தலைமை பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் அவர் ஒரு இந்து என்பதும் நாம் அனைவரும் ஆரியர்களாக இருப்பதைப் போன்றது தான்.

அவரது குடும்பம் மூன்று தலைமுறைக்கு முன்பே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டனர். ரிஷி சுனக் இங்கிலாந்தில் பிறந்தார் ஒருவர். அவர் 100% ஒரு பிரிட்டிஷ்காரர். அதேநேரம் ரிஷி சுனக் வெற்றியடைய இறைவனைப் பிரார்த்திப்போம் பாஜகவினருக்கு மட்டும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
வறுமையின் இருள்
இந்த விஷயத்தில் நீங்கள் விவாதத்தில் எல்லாம் ஈடுபட வேண்டாம். நாடு முழுவதும் மிகப் பெரிய சாம்ராஜ்ஜியமாக விரிந்து கிடந்த ஒரு நாட்டில் இப்போது வறுமையின் இருள் எப்படிச் சூழ்ந்தது என்பது குறித்துத் தான் நாம் விவாதம் செய்ய வேண்டும்.
நமக்கு அதுபோன்ற நிலை ஏற்படுமா? தைரியமாகச் சொல்லலாம். அதுபோல எந்தவொரு நிலையும் நமக்கு ஏற்படாது. இங்கிலாந்தில் மிகக் குறைவான இயற்கை வளங்கள் இருந்தன. அதன் செல்வம் உலகின் பிற நாடுகளிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது.
ஆனால், இந்தியா என்பது இயற்கையாகவே அதிகப்படியான வளங்களைக் கொண்ட ஒரு நாடாகவே உள்ளது" என்று தெரிவித்தார்.