ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
M K Stalin
Government of Tamil Nadu
Rishi Sunak
England
By Thahir
இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த ரிஷி சுனக், நேற்று மன்னர் மூன்றாம் சார்லஸ்-ஐ சந்தித்த பின்பு பதவியேற்றுக்கொண்டார்.
இவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள்.
இதன் மூலம் இந்தியா – இங்கிலாந்தின் உறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.