கோலியின் ஜெர்சியுடன் இறங்கிய ரிஷப் பந்த் - வெடித்த சர்ச்சை!
ரிஷப் பந்த் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார்.
ரிஷப் பந்த்
மூன்று மாதங்களுக்குப் பிறகு காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த், மீண்டும் களமிறங்கினார். அப்போது இந்தியா ஏ போட்டியில் அவர் விராட் கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் தோனியின் 7, சச்சினின் 10 போல, கோலியின் 18 ஆம் நம்பர் ஜெர்சிக்கும் ஓய்வளிக்க ரசிகர்கள் கோரினர். ஆனால், பிசிசிஐ இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எந்த முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.
வெடித்த சர்ச்சை
தற்போது இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ அதிகாரி, இந்தியா ஏ போட்டிகளில் வீரர்கள் எந்த எண்ணையும் தேர்வு செய்யலாம். சர்வதேச போட்டிகளில் மட்டுமே ஜெர்சி எண் நிரந்தரம்.

பந்த் தனது 17 ஆம் நம்பரையே அணிவார் என தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாதம், முகேஷ் குமார் இந்தியா ஏ அணிக்காக 18 ஆம் நம்பர் ஜெர்சியை அணிந்தபோதும் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.