நீங்க ஃபினிஷர் இல்ல; தோனி மாதிரியெல்லாம் டிரை பண்ணாதீங்க ரிஷப் -
ரிஷப் பண்ட் ஃபினிஷர் இல்லையென செத்தேஷ்வர் புஜாரா அறிவுரை வழங்கியுள்ளார்.
ரிஷப் பண்ட்
ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 161 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட நேற்று 7வது இடத்தில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய வீரர் செத்தேஷ்வர் புஜாரா,
முன்னாள் வீரர் அறிவுரை
ரிஷப் பண்ட் உண்மையில் என்ன நினைத்து 7-வது வரிசையில் களமிறங்கி விளையாடினார் என்று தெரியவில்லை. அவர் மிடில் வரிசையில் களமிறங்கி விளையாட வேண்டும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவர் தோனி செய்ததை செய்ய நினைக்கிறார்.
ஆனால், அவர் அந்த நிலைக்கு அருகில் கூட இல்லை. 6-வது மற்றும் 15-வது ஓவர்களுக்கு இடையில் மிடில் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய வீரர்களில் ரிஷப் பண்ட் ஒருவர் என்று நான் இன்னும் நினைக்கிறேன். அவர் பினிஷர் கிடையாது, எனவே, ரிஷப் பண்ட் மிடில் வரிசையில் இறங்கி பேட்டிங் செய்வதே சரியானது எனத் தெரிவித்துள்ளார்.