மீண்டும் மீண்டும்..விதிமீறல் ; கடுப்பான BCCI - டெல்லி அணியில் ரிஷப் பண்ட் விளையாட தடை !
டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு ரூ.20 லட்சம் அபராதத்துடன், ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி அணி
நடப்பாண்டின் ஐபிஎல் சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு லீக் போட்டியான அருண் ஜெட்லீ மைதானத்தில் நடந்த டெல்லி கேபிட்டல்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
அதில் டெல்லி அணி போட்டியின் போது மெதுவாக பந்து வீசியதால், கேப்டன் ரிஷப் பந்துக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஒதுக்கப்பட்ட நேரத்தை காட்டிலும் கூடுதலாக பந்துவீச நேரம் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட்
ஏற்கனவே இரண்டு முறை இது போன்று பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதாக டெல்லி அணிக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.இதேபோன்று மற்ற வீரர்களுக்கு 12 லட்சம் ரூபாய் அல்லது போட்டிக்கான ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதத்தை செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சூழலில், அதில் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் இடம் பெற மாட்டார் என்ற அறிவிப்பு டெல்லி அணி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.