டிராவிட் போல் இல்லை; கம்பீர் ஒருதலைப்பட்சத்தில் ஆக்ரோஷமாக..நட்சத்திர வீரர் அதிருப்தி!
கெளதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார் என்று ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.
கம்பீர்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். நடந்து முடிந்த ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிடுக்கு பின் கௌதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.
அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தார்.
வீரர் அதிருப்தி
இந்த நிலையில், தற்போதைய பயிற்சியாளரான கம்பீர் ஒருதலைப்பட்சமாக இருப்பதாக ரிஷப் பண்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக ரிஷப் பண்ட் பேசியதாவது, ‘‘ராகுல் டிராவிட், மிகச்சிறப்பாக அணியை வழிநடத்தினார்.
வெற்றி, தோல்வி இரண்டும் சகஜம் என நினைக்க கூடியவர். ஆனால், கம்பீர் அப்படி கிடையாது. வெற்றி மட்டும்தான் இருக்க வேண்டும் என்கிறார். மிகவும் ஆக்ரோஷமாக இருக்கிறார்’’ என கடுமையாக விமர்சித்துள்ளார். இது தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.