ரிஷப் பண்ட் நீக்கம் - ஆசிய கோப்பை, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆட மாட்டார்!
ரிஷப் பண்ட் காயம் காரணமாக விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ரிஷப் பண்ட் காயம்
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியின் போது ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டது.
அவர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைய குறைந்தது ஆறு வாரங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, செப்டம்பர் 9-ம் தேதி தொடங்கவுள்ள ஆசிய கோப்பை T20 தொடர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் அவர் பங்கேற்க மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
நீண்ட விலகல்
அவரது இடத்தில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் விக்கெட் கீப்பராகச் செயல்பட்ட இளம் வீரர் த்ருவ் ஜுரெல், வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விக்கெட் கீப்பராகத் தொடர அதிக வாய்ப்புள்ளது.
இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட, காயமடைவதற்கு முன்பு வரை 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்களுடன் 479 ரன்கள் குவித்து அபாரமான ஃபார்மில் இருந்தார்.
எனவே, டெஸ்ட் தொடரில் அவரது இழப்பு இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.