பும்ரா விளையாடுவாரா? அவர்களுக்கு இந்த ரகசியம் தெரியாது - கடுப்பான சச்சின்
சச்சின் டெண்டுல்கர், பும்ராவை பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.
பும்ராவை பாராட்டிய சச்சின்
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்று தொடரை சமன் செய்தது.
உடல் தகுதி காரணமாக பும்ரா மூன்று டெஸ்ட் போட்டி விளையாடினாலும் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய பவுலர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து பும்ரா இல்லாமல் இந்திய அணி சிறப்பாக செயல்படுவதால் அவர் இனி தேவை இல்லை என பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ரசிகர்கள் பலரும் பும்ரா இல்லாமல் இந்தியா சிறப்பாக விளையாடியது என்று பேசி வருகிறவர்களை நான் கவனிக்கின்றேன். அது மிகவும் தவறு.பும்ரா இல்லாமல் இந்தியா வெற்றி பெற்றது எதர்ச்சியாக நடந்ததே தவிர அது காரணம் கிடையாது.
பும்ராவின் தரம் என்பது அபாரமானது. அவர் இந்தியாவுக்காக செயல்பட்ட விதத்தை யாராலும் நம்ப முடியாது அளவுக்கு சிறப்பாக இருக்கும். தொடர்ந்து ஒரே மாதிரி சிறப்பான செயல்பாட்டை எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி பும்ரா செயல்படுத்தி இருக்கின்றார். நான் எப்போதுமே பும்ராவை தான் முதலிடத்தில் வைப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரிஷப் பண்ட் காயம்
மேலும், 4வது போட்டியில் ரிஷப் பண்ட் பவுண்டரி அடிக்க முயற்சித்த போது பாதத்தில் காயத்தைச் சந்தித்தார். அவருடைய பாதத்தில் பலத்த காயமடைந்ததால் நடக்க முடியாமல் வெளியேறினார். இதுகுறித்து சச்சின் கூறுகையில்,
“ரிஷப் பண்ட் அடித்த ஸ்வீப் ஷாட்டில், அவர் பந்துக்கு அடியில் சென்று ஸ்கூப் அடிப்பதற்கான கோணத்தைப் பெற விரும்பினார். அங்கே ரிஷப் விழுவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர் அதை வேண்டுமென்றே செய்தார்.
அப்போது தான் அவரால் பந்துக்கு அடியில் சென்று அடிக்க முடியும். பந்துக்கு அடியில் சென்று அடிப்பதே அது போன்ற ஷாட்டுகளை வெற்றிகரமாக அடிப்பதற்கான ரகசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.