ஐபிஎல் ஏல வரலாற்றில் புதிய சாதனை - அதிக தொகைக்கு ஏலம் போன ரிஷப் பண்ட்
ஐபிஎல்லில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
ஐபிஎல் ஏலம்
2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் இன்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் தொடங்கியுள்ளது.
நாளையும் இந்த ஏலம் நடைபெற உள்ளது. இதில் மொத்தமாக 577 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். எந்த வீரரை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ரிஷப் பண்ட்
இந்நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் வந்தபோது அவரை தங்கள் அணிக்கு எடுக்க கொல்கத்தா, பஞ்சாப், டெல்லி அணிகள் ஏலம் கேட்டன. 2 கோடியில் ஆரம்பித்த எல்லாம், 6 கோடி, 15 கோடி என உயர, இறுதியாக ரூ.26.75 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஸ்ரேயாஸ் ஐயரை கைப்பற்றியது.
இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், மிக அதிக தொகைக்கு ஏலம் போன கிரிக்கெட் வீரர் மிட்சல் ஸ்டார்க்கின் ரூ.24.75 கோடி என்ற சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் முறியடித்தார்.
அடுத்த 30 நிமிடங்களில், ரிஷப் பண்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணி ஏலம் எடுத்து ஸ்ரேயாஸ் ஐயரின் சாதனையை முறியடித்தது.