IPL ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள் -தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
2023 ஐபிஎல் போட்டிக்காக நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட 10 வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஐபிஎல் போட்டி
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த வேக பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஏலத்தில் 25 கோடியே 75 லட்ச ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
மேலும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 20 கோடியே 5 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இங்கிலாந்தை சேர்ந்த ஆல் ரவுண்டர் சாம் கரணை 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீனை மும்பை இந்தியன்ஸ் அணி 17 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஏலம்
அதே போல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை 16 கோடி 25 லட்ச ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங்கை 2015 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த நிக்கோலஸ் பூரனை 2022 ஐபிஎல் மெகா ஏலத்தின் போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 16 கோடி ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கியது.
ஆஸ்திரேலியா அணியின் ஆல் ரவுண்டரான மேக்ஸ்வெல்லை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2021 ஐபிஎல் தொடரில் 14 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.