எனது வாழ்வின் முக்கியமான தருணம் இது தான் - ஆட்டநாயகன் பண்ட் பேட்டி
இந்தியா அணியின் இந்த வெற்றி எனது வாழ்வின் முக்கியமான தருணம் என ஆட்டநாயகன் ரிஷப் பண்ட பேசியுள்ளார். இந்தியா அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரிஷப் பண்ட ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து அவர் பேசுகையில், ’என் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும். இந்த டெஸ்ட் தொடர் எனக்குக் கனவுத் தொடராக இருந்தது. இந்திய அணி நிர்வாகம் நான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் நீ முக்கியமானவர், மேட்ச் வின்னராக இருக்க வேண்டும், உன்னால் போட்டியை வெல்ல வைக்க முடியும் எனத் தொடர்ந்து எனக்கு ஊக்கமளித்து வந்தனர்.
இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்தப்போகும் ட்ரம்ப்: நகர்வுகளை விவரிக்கும் US முன்னாள் எம்.பி IBC Tamil
இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபானி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை IBC Tamil