Delhi capitalsஐ விட்டு வெளியேற காரணம் இதுதான் - ஒப்பனாக சொன்ன ரிஷப் பண்ட்!
டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு வெளியேறிய காரணம் குறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார்.
ரிஷப் பண்ட்
ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அந்த வகையில் அடுத்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது மிக விரைவில் நடக்க இருக்கிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் பேட்டிங் நட்சத்திரமான ரிஷப் பண்ட், டெல்லி கேப்பிடல்ஸ் உடனானதனது பிளவு குறித்து தற்போது மௌனம் களைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இது பணத்தைப் பற்றியது அல்ல என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியன் பிரீமியர் லீக்கின் ஒளிபரப்பாளர்களில் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவிற்கு ரிஷப் பந்த் இந்த பதிலை அளித்துள்ளார். அதாவது அதில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக டெல்லி ஏன் கேப்டனைத் தக்கவைக்கவில்லை என்பதை சுனில் கவாஸ்கர் விளக்க முயன்றார்.
காரணம்
அந்த வீடியோவில், விக்கெட் கீப்பர்-பேட்டரின் தக்கவைப்புக் கட்டணத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் உடன்படவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்தார். நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் திட்டமிடப்பட்ட மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பண்டை திரும்ப வாங்கும் என்றும் அவர் ஊகித்தார்.
இந்த சூழலில், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஏலத்திற்கு முன் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொண்டது. அதில் அக்சர் படேல் ரூ.16.5 கோடியும், குல்தீப் யாதவ் ரூ.13.5 கோடியும், தென்னாப்பிரிக்க நட்சத்திரம் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு ரூ.10 கோடியும் கொடுக்கப்பட்டது.
மேலும் அன் - கேப்ட் விக்கெட் கீப்பர் ரூ.4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். டெல்லி கேப்பிட்டல்ஸ் தனது எந்த வீரருக்கும் அதிகபட்ச தொகையான ரூ.18 கோடியை செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.