RIP Hardik Pandya - ட்விட்டரில் முற்றும் மோதல் - சங்கடத்தில் MI அணி
இணையதளத்தில் தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவை விமர்சிப்பதை வழக்கமாகியுள்ளனர் ரோகித் சர்மாவின் ரசிகர்கள்.
மும்பை இந்தியன்ஸ்
IPL தொடரில் 5 முறை கோப்பை வென்ற அணியாக பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது மும்பை இந்தியன்ஸ் அணி. 2013, 2015, 2017, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக கோப்பையை வென்று அசத்தியுள்ளது.
5 முறை அந்த அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணம் ரோகித் சர்மா தான். அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்ற போதிலிருந்து அந்த அணி புது உத்வேகம் பெற்று 5 கோப்பையை தனதாக்கியது. அதனை தொடர்ந்து தாம், மும்பை அணியின் ஆதிக்கமும், ரசிகர் பட்டாளமும் பெருமளவு அதிகரித்தது.
பல இளம் வீரர்களை அணிக்கு கொண்டு வந்த ரோகித் சர்மா தலைமையில் தான் ஜஸ்பிரிட் பும்ரா,ஹர்திக் - க்ருணாள் பாண்டியா, இஷான் கிஷன் என பல திறமைகள் வெளிவந்தது.
இந்த ஆண்டு ரோகித் சர்மாவின் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மும்பை அணி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
#RIP Hardik Pandya
கடந்த 2 ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்டியா, மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்படுத்து பெரும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றது. ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா இது குறித்து வெளிப்படையாகவே, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் மாற்றம் குறித்து வினவப்பட்ட போது, அதற்கு MI அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் அணியின் கொச் மார்க் பவுச்சர் இருவரும் அமைதியாக இருந்தனர்.
இது பெரும் கண்டனங்களை பெற்று வருகின்றது. இது தொடர்பாக நெட்டிசன்கள் சிலர் சமூகவலைத்தளங்களில் "#RIP Hardik Pandya" என்ற ஹாஷ்டாக்கை சமூகவலைத்தளத்தில் ட்ரெண்ட்டாக்கி உள்ளனர்.

கிழக்கை உலுக்கிய பிள்ளையான் - கருணாவின் கூட்டுப் படுகொலைகள்: பாரிய ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி IBC Tamil

பழிவாங்கும் படலம் ஆரம்பம்...! சிவப்புக் கொடியை ஏற்றிய ஈரான் - முக்கிய தலைகளை போட்டு தள்ளிய இஸ்ரேல் IBC Tamil
