ரிங்கு சிங் அணியில் இல்லை - காரணம் ரோகித் சர்மாவா? போட்டுடைத்த அஜித் அகர்கர்
உலககோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இல்லாதது பலரையும் ஏமாற்றியது.
இந்திய அணி
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளில் நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ரிங்கு சிங்
கடந்த சில காலமாக இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிங்கு சிங்'கிற்கு இடம் கிடைக்காததை குறித்து பலரும் விமர்சனங்களை வைத்து வந்தனர்.
விமர்சனங்கள் அதிகரித்த நிலையில், தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார். இது விவாதிக்க வேண்டிய கடினமான விஷயம். அவர் எந்தத் தவறும் செய்யவில்லை, இது combination பற்றியது. கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக இரண்டு ஸ்பின்னர்களை வழங்க விரும்பினோம்.
அவர் அணியில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் ரிங்கு reserve'இல் இருக்கிறார்,
அதனை வைத்து ரிங்கு 15 பேர் கொண்ட அணியில் தேர்வாவதில் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பது உங்களுக்குக் புரியவேண்டும். இருப்பினும், முடிவில் அணியில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும்.