ஹர்திக் - உங்களால முடிஞ்சா அளவிற்கு விமர்சியுங்கள்..ஆனா அடுத்த மாசம்!! வைரல் ட்வீட்
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி
உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் உலக கோப்பை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளில் நடைபெறவுள்ளது.
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு நாள்
இதில், ஹர்திக் பாண்டியா தேர்வு குறித்து பலரும் பல விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். காரணம், ஹர்டிக் பாண்டியாவின் Recent IPL Form. மும்பை அணியின் கேப்டனான அவர் தொடர்ந்து பேட்டிங் - பௌலிங் என இரண்டிலும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
அதே நேரத்தில், மும்பை அணியின் அவரது தலைமையில் இந்த ஆண்டு படுதோல்வியை சந்தித்து வருகின்றது. பல கருத்துக்கள் ஹர்திக் பாண்டியாவிற்கு எதிராக இருக்கும் நிலையில், அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பக்க பதிவு வருமாறு,
அவரது ஆட்டத்தை நீங்கள் விரும்பும் அளவுக்கு விமர்சியுங்கள், ஆனால் தொடர்ந்து தனிப்பட்ட ட்ரோலிங் மற்றும் தாக்குதல்களைப் பார்ப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. வலுவாக இருங்கள் பாண்டியா.
Criticise his performance as much as you want but it's extremely disappointing to see the constant personal trolling and attacks. Stay strong @hardikpandya7 next month you'll be playing crucial knocks in WC and the same people will be singing your praise. #LSGvMI #T20WorldCup pic.twitter.com/rYk0kozjMy
— Wasim Jaffer (@WasimJaffer14) April 30, 2024
அடுத்த மாதம் நீங்கள் WC இல் முக்கியமான ஆட்டத்தை விளையாடுவீர்கள், அதே நபர்கள் உங்களைப் புகழ்ந்து பாடுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.