சட்டமான கருக்கலைப்பு உரிமை; அங்கீகரித்த முதல் நாடு - எது தெரியுமா?

France Abortion
By Sumathi Mar 05, 2024 06:47 AM GMT
Report

கருக்கலைப்பு உரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கருக்கலைப்பு உரிமை

பிரான்சில் கடந்த 1975ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு குற்றமற்றதாக கருதப்படுகிறது. தொடர்ந்து, கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக மாற்றும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

france

இதற்கு 780 உறுப்பினர்களும், எதிராக 72 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். அதில், பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

கருக்கலைப்பு:அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள்-இந்தியால என்ன சட்டம்?

கருக்கலைப்பு:அமெரிக்காவில் வெடிக்கும் போராட்டங்கள்-இந்தியால என்ன சட்டம்?

மசோதா நிறைவேற்றம்

இதன் மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாகப் பதிவு செய்த முதல் நாடு ஆகியுள்ளது பிரான்ஸ். இதன்மூலம், குறைந்தபட்சம் முதல் 14 வார கர்ப்பகாலத்தில் அரசு நிதியுதவியுடன் கருக்கலைப்புகளை அனுமதிக்கிறது. பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

rights-to-abortion-bill

மேலும், இணையத்தில் கருக்கலைப்பு எதிர்ப்பு பேச்சு தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டத்தை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திரளான மக்கள் கொண்டாடினர். ஈபிள் டவர் மின் விளக்குகளால் ஒளியூட்டப்பட்டது.

இதுகுறித்து “நாட்டின் மகளிர் அனைவருக்கும் நாங்கள் ஒரு செய்தி சொல்கிறோம். உங்கள் உடல் உங்களுக்கு சொந்தம். அதில் யாரும் எந்த முடிவும் செய்ய முடியாது” என அந்நாட்டு பிரதமர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.