இலவச கருக்கலைப்பு: அரசு மருத்துவமனையில் பலகை - மக்கள் அதிர்ச்சி!
அரசு மருத்துவமனையில் இலவச கருக்கலைப்பு என வைக்கப்பட்ட பலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலவச கருக்கலைப்பு
கோவை, அன்னூர் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கிராம மக்கள் அங்கு சென்று சிகிச்சை பெறுவர். இந்நிலையில் இந்த மருத்துவமனை முகப்பு பகுதியில் இங்கு இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும்.
அது குறித்து ரகசியம் காக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிய காரணங்கள் இருந்தால் கருக்கலைப்பு செய்யப்படும்.
சட்டவிரோதம்
மேலும், திருமணத்திற்கு முன்பு சூழ்நிலை காரணமாக கருவுற்ற பெண்களுக்கு அவரது பெற்றோர் உறுதிமொழியின் படி சட்டப் பூர்வமாக கருக்கலைப்பு செய்யப்படுகின்றன. மேலும், தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் இப்படி பலகை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.