பிரஷ் பண்ண பிறகு வாய் கொப்பளிக்கக் கூடாதா? டாக்டர் சொன்னதை கேட்டீங்களா!
பல் துலக்கிய பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கட்டாயம் கொப்பளிக்க வேண்டுமா?
பல் துலக்குதல்
நாம் பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிப்பது தான் வழக்கம். ஆனால், அப்படி வாய் கொப்பளிப்பது எந்த நன்மையும் தராதாம். இதை நம்பமுடிகிறதா? பல் மருத்துவர் சாரா அல்ஹம்மதி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு பல் மருத்துவராக நாங்கள் பல் துலக்கிய பிறகு வாய் கொப்பளிக்க வேண்டாம் என்று சொல்கிறோம். ஆம், அது கடினம் என்று எனக்குத் தெரியும். பல் துலக்கிய உடனேயே கழுவ வேண்டும் என்பது சாதாரண மனநிலை. அதிக அளவு ஃவுளூரைடை விழுங்கக் கூடாது என்பதால் நாம் அவ்வாறு செய்கிறோம்.
எது நன்மை?
பொதுவாக தினசரி பரிந்துரைக்கப்படுவதை விட அதிகளவு ஃவுளூரைடு அளவைக் கொண்ட சில டென்டல் பிரொடக்ட்ஸ் உள்ளன. பல் துலக்கிய பிறகு உங்கள் வாயை தண்ணீரில் கொப்பளிக்க வேண்டுமா என்பதில் ஒருமித்த கருத்து இல்லை, ஆனால் கழுவாமல் இருப்பது பல் சொத்தைக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு பயனளிக்கும்.
எனவே பல் துலக்கிய பிறகு துப்புங்கள், கொப்பளிக்க வேண்டாம். பல் துலக்கிய பிறகு பேஸ்ட்டை அப்படியே பற்களில் விட்டுவிடுவது, இதை நீங்கள் தொடர்ந்து செய்யும் போது நமது பல் ஆரோக்கியத்திற்கு உதவும். ஃவுளூரைடு பேஸ்டில், நமது பற்களில் ஃவுளூரைடு நீண்ட நேரம் செயல்படுவதால், பல் சிதைவைத் தடுக்கும்.
சென்சிட்டிவ் டூத்பேஸ்ட் விஷயத்தில், அதில் உள்ள அயனிகள் (ions) ட்யூபிள்ஸை (tubules) நன்றாக அடைக்க உதவும், இது சென்சிட்டிவை வேகமாக குறைக்க உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
பல் துலக்கிய பின் உடனடியாக கழுவுவது உங்கள் வாய் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதற்கு போதுமான சான்றுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.