இனி வேலை நேரம் முடிந்தபின்..நிறுவனத்தின் அழைப்பை துண்டிக்கனும் - புதிய சட்டம் அமல்!
வேலை நேரம் முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை என்ற புதிய சட்டம் அமலாகியுள்ளது.
புதிய சட்டம்
தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்ற பிறகும் பல நேரங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது வழக்கம். ஒரு சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் சென்று
அவர்கள் கேட்கும் அல்லது சொல்லும் வேலையை செய்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அதேபோல விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் தொடர்ந்து வேலை பற்றியே நினைத்து கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது. வேலையை தவிர்த்து அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை என சொல்லலாம்.
வேலை நேரம்
இந்த சுமையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஒரு புதிய சட்டத்தைக் அமல்ப்படுத்த உள்ளன.
அதாவது, வேலை நேரம் முடிந்தபின் வீட்டிற்கு சென்ற தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது. அதன்படி இந்த நாடுகளின் வரிசையில், ஆஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான முழு உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.