சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கிய ஃபோர்டு நிறுவனம்

Chennai work starts Ford Motor Company
By Anupriyamkumaresan Sep 20, 2021 09:04 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ள ஃபோர்டு நிறுவனத்தின் சென்னை ஆலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது.

சர்வதேச அளவில் பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ட் நிறுவனத்திற்கு, இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்திலும், சென்னை அருகே உள்ள மறைமலை நகரிலும் தொழிற்சாலைகள் உள்ளன.

சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கிய ஃபோர்டு நிறுவனம் | Chennai Ford Company Again Starts Work Employee

இங்கு 'ECOSPORTS', எண்டவர்'. 'ஃபிகோ' மாடல் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கார் உற்பத்தியை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக, கடந்த 9ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது ஃபோர்டு நிறுவனம்.

5 ஆயிரத்து 161 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்த நிலையில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதே இம்முடிவுக்கு காரணம் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.

ஃபோர்டு தொழிற்சாலையை நம்பியுள்ள 4 ஆயிரம் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மறைமுகத் தொழிலாளர்களுக்கும் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் ஊழியர்களின் பணி பாதுகாப்பு குறித்த தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளை ஏற்க ஃபோர்டு நிறுவனம் மறுத்துவிட்டது.

சென்னை ஆலையில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்கிய ஃபோர்டு நிறுவனம் | Chennai Ford Company Again Starts Work Employee

அதனால் அவர்களது வாழ்வாதாரமே கேள்விக்குறியான நிலையில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ஃபோர்டு நிறுவனம். இதுவரை பெற்ற ஆர்டர்களில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்ய வேண்டி இருப்பதால் இன்னும் பல மாதங்களுக்கு மறைமலைநகர் தொழிற்சாலையில் உற்பத்தி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவல் சற்றே ஆறுதல் அளிக்கும் விதமாக இருந்தாலும் தமிழ்நாடு அரசும் அரசியல் கட்சிகளும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் தொழிலாளர்கள்.