குடிபோதை நபருடன் பைக்கில் கூட சென்றாலும் சிக்கல் இனி.. காவல்துறை அதிரடி!
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிபோதையில் வாகனம்
சென்னையில் இன்று முதல் புதிய போக்குவரத்து விதி அமலுக்கு வந்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் நபரிடம் மட்டுமே போக்குவரத்து போலீசார் அபராத தொகை பெற்று வந்த நிலையில், தற்போது வாகன ஓட்டுனர் குடிபோதையில் இருந்து,
பின்னால் அமர்ந்து செல்வோர் குடிபோதையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் ஓட்டுநர் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால்,
குற்றத்திற்கு துணை
அவருடன் பயணிக்கும் நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சவாரி செல்லும் போது இந்த விதிமுறை பின்பற்றப்படாது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், அபராதம் விதிக்கப்படுவதாகவும் சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகன சட்டம் பிரிவு 185-
போதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் 188- குற்றத்திற்கு துணை போகுதல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.