ரிதன்யா இறப்பு திட்டமிட்ட கொலை; பரபரப்பை கிளப்பிய சீமான் - ஏன்?
ரிதன்யா இறப்பு திட்டமிட்ட கொலை என சீமான் தெரிவித்துள்ளார்.
ரிதன்யா தற்கொலை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துக்கொண்ட ரிதன்யா விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதுாரைச் சேர்ந்த ரிதன்யா (27) வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இறக்கும் முன் அவர் பேசிய வீடியோ, இதயத்தை நொறுங்க செய்கிறது.
அவரது தற்கொலைக்கு காரணமான கணவர் கவின்குமார் மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் மீது, முறையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக, மூவரும், எளிதில் ஜாமீனில் வரக்கூடிய வழக்கு பதிவு செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
சீமான் கண்டனம்
இது வெறும் தற்கொலை அல்ல; இனி வாழவே முடியாத நிலைக்கு அவரை தள்ளி, தற்கொலை செய்ய வைத்த திட்டமிட்ட படுகொலை. இந்த நுாற்றாண்டிலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் உயிரிழப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒட்டுமொத்த சமூகமும் தலைகுனிய வேண்டும்.
ரிதன்யா மரணத்துக்கு காரணமான மூவர் மீதும், கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், கடுந்தண்டனை பெற்றுத்தர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார் மற்றும் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், ரிதன்யாவின் மாமியார் சித்ரா தேவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.