முதலிரவு அன்றே ஓடிவிட்டார் - நிகிதா மீது பகீர் புகார் சொன்ன அரசியல் தலைவர்!
தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன் நிகிதா மீது புகார் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் வழக்கு
சிவகங்கை, திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் விசாரணைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் போலீஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட 5 காவல்துறையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்துள்ளார். 2010இல் துணை முதல்வரின் உதவியாளரை தெரியும் என்றுக் கூறி மோசடியில் இறங்கியுள்ளார்.
[QNTLRR6
திருமாறன் புகார்
மேலும், பணத்தைக் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டப்போது நிகிதா குடும்பத்தினர் அவர்களை மிரட்டியுள்ளனர். இந்நிலையில், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், தனக்கும், நிகிதாவுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
கல்யாணமாகிய முதல் இரவு அன்றே அவர் ஓடிவிட்டார். தனக்கு முன்பே அவர் 3 திருமண மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். நிகிதாவை 21 ஆண்டுகளுக்கு முன்பே தனக்கு தெரியும். அவர் செய்த திருமண மோசடியில் தானும் பாதிக்கப்பட்டுள்ளேன். வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்து லட்சக்கணக்கில் பணம் பறிப்பது தான் அவருக்கு வாடிக்கை.
நிகிதாவின் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம். அவரது அப்பா 10 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு தான் தனக்கு விவாகரத்து கொடுத்தார். காவல்துறையுடன் நிகிதாவுக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது. இனிமே இந்த குடும்பம் யாரையுமே ஏமாற்றக் கூடாது.
சட்டத்தையும் தனது ஆளுமையையும் தவறாக பயன்படுத்தி, அப்பாவிகளை அச்சுறுத்துவதே இவரது வேலை. அஜித்குமார் கொலை வழக்கில் இவரை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.