கோலி வேண்டும் என்றே செய்கிறார்.. நடவடிக்கை எடுங்கள் - கொதித்த ரிக்கி பாண்டிங்!
விராட் கோலி வேண்டுமென்றே பிரச்ணை செய்கிறார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. 9 வயதான சாம் கோன்ஸ்டாஸ் துவக்க வீரராக களம் இறங்கினார்.
2021க்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்தில் முதல் சிக்சரை அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 10 வது ஓவரின் முடிவில் சாம் கோன்ஸ்டாஸ் நேராக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது விராட் கோலி வேண்டும் என்றே தான்
நடந்து வந்த பாதையை மாற்றி அவரை இடித்ததோடு மட்டுமல்லாமல் அவருடன் வாக்குவாதம் செய்தார். பின், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் அம்பயர்கள் இடை மறித்து இருவரையும் சமாதானம் செய்தனர். இந்நிலையில் கோலியின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வரும் ஆஸி.
ரிக்கி பாண்டிங்
ரசிகர்கள், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், விராட் கோலி எப்படி நடந்து வருகிறார் என்று பாருங்கள்.
விராட் கோலி வேண்டுமென்று மைதானத்தில் ஒரு இடத்தில் இருந்து நகர்ந்து வந்து அவர்தான் இந்த மோதலை ஆரம்பிக்கிறார். இதில் விராட் கோலி மீது தான் தவறு இருக்கிறது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. இதனை ஐசிசி உற்று நோக்கும் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.