ரோகித் தான் பெஸ்ட் கேப்டன்..மும்பை அணியில் அப்படி இல்லை - ரிக்கி பாண்டிங் ஆதங்கம்

Hardik Pandya Rohit Sharma Mumbai Indians Indian Cricket Team Ricky Ponting
By Karthick Jun 11, 2024 07:21 AM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவி பிரச்சனை நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்திய விஷயமாக இருந்தது.

கேப்டன்ஷிப்

மும்பை அணியை 5 கோப்பைகளுக்கு வழிநடத்திய ரோகித் சர்மா பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அணியும் இம்முறை படுதோல்வியையே அடைந்தது.

Rohit Hardik celebration Pakistan match T20 World cup

கேப்டன் மாற்றப்பட்டதே இதற்கு காரணம் என ஒரு தரப்பு விமர்சித்தது. இந்நிலையில், ஞாயிறு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், இந்தியா அணி வெறும் 119 ரன்களை defend செய்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Rohit Hardik celebration Pakistan match T20 World cup

ஒருகட்டத்தில் 80/4 என வெற்றி முனைப்பில் இருந்த பாகிஸ்தான் அணி இறுதியில் கோட்டை விட்டது. இதற்கு அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சமயோஜித நடவடிக்கைகளே காரணம் என விமர்சகர்கள் பலரும் ரோகித்தை பாராட்டு வருகிறார்கள்.

Ricky Ponting Rohit Sharma

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் மும்பை கேப்டனான ரிக்கி பாண்டிங் இந்த விஷயத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஒரே சிக்ஸ்...உலகில் யாரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித்!!

ஒரே சிக்ஸ்...உலகில் யாரும் செய்யாத சாதனையை அசால்ட்டாக செய்த ரோகித்!!

மும்பையில் அப்படியில்லை 

அவர் பேசும் போது, ரோகித் சர்மா அனுபவம் வாய்ந்த கேப்டன். போட்டியில் அவரின் கேப்டன்சி அற்புதமாக இருப்பதாக பாராட்டினேன். இதற்கு மேல் கேப்டன்சியில் அவர் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல்'லிலும் இவ்வாறான அணியும் பந்துவீச்சாளர்களே அமைந்தது. வீரர்களின் மனநிலை திறமை போன்றவற்றை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் அவர்களை பயன்படுத்துகிறார்பயன்படுத்துகிறார்.

Rohit Hardik celebration Pakistan match T20 World cup

கேப்டனாகவும் அவர் சரியான திட்டத்துடன் முன்னெடுக்கிறார். தனது திட்டத்தை பவுலர்களிடம் கூறி, சிறப்பாக அதனை செயல்படுத்துகிறார். அதன் காரணமாகவே, ஹர்திக் சிறப்பாக விளையாடுகிறார்.