இத்தோடு பாஜக உடனான உறவை முடித்துக் கொள்கிறேன் - திருச்சி சூர்யா சிவா அறிவிப்பு!
Tamil nadu
BJP
K. Annamalai
By Sumathi
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்.
திருச்சி சூர்யா சிவா விலகல்
பெண் நிர்வாகியை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார் திருச்சி சூர்யா சிவா. இந்நிலையில், இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்.
அண்ணன் அண்னாமலைக்கு நன்றி, இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.
வரக்கூடிய தேர்தலில் கண்டிபாக பாஜக் இரட்டை இலக்கை அடையும் என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், பாஜக மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்றும் திருச்சி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.