இந்தியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் எது தெரியுமா? ஆச்சர்ய தகவல்
இந்தியாவிலேயே மிகவும் பணக்கார கிராமம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
பணக்கார கிராமம்
குஜராத், கட்ஜ் மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் மாதாப்பூர். சுமார் 32,000 மக்கள் தொகை கொண்டது. இவர்கள் கூட்டாகச் சேர்ந்து ரூ. 7,000 கோடிக்கும்
அதிகமான நிலையான வங்கிக் கணக்கு வைப்புத் தொகைகளைக் (Fixed Bank Deposits) கொண்டுள்ளனர். இந்தக் கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 17 முக்கிய வங்கிகளின் கிளைகள் செயல்படுகின்றன.
தொடர் முதலீடு
இங்கு இவ்வளவு பொருளாதார செழிப்பு இருக்க காரணம் மக்கள் தொகையில் கணிசமான பகுதியினர் வெளிநாடுகளில் வசிப்பதுதான்.
சுமார் 65 சதவீதம் பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும்,
சில ஆப்பிரிக்க நாடுகளிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் இங்கு தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகின்றனர்.