25 திருநங்கைகள் பினாயில் குடித்து தற்கொலை முயற்சி - பகீர் சம்பவம்!
25 திருநங்கைகள் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
மத்திய பிரதேசத்தின் இந்தூரில் பங்கஜ் மற்றும் அக்ஷய் என்ற இரண்டு ஆண்களால் ஒரு திருநங்கை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றவாளிகள் மீது காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து, 25 திருநங்கைகள் ஒன்றாக சேர்ந்து ஃபினாயில் திரவத்தை குடித்துள்ளனர்.
தற்கொலை முயற்சி
உடனே அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அனைவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பங்கஜ் மற்றும் அக்ஷய் ஆகிய இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.