மரணத்தை தடுக்கும் ஊசிகள்..மர்ம தீவுக்கு செல்லும் பணக்காரர்கள் - பின்னணி என்ன?
மரணத்தை தடுக்கும் ஊசிகள் குறித்து இந்த பதிவில் தெரிவித்து கொள்ளலாம்.
பணக்காரர்கள்
உலகில் பிறக்கும் அனைத்து உயிர்களுக்கும் மரணம் என்பது இன்றியமையாத ஒன்று. எப்போது நிகழும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக உள்ளது. சாமானிய மக்கள் எத்தகைய துன்பம் ஏற்பட்டாலும் மரணம் அடையும் ஆசை மட்டும் பலருக்கு ஏற்பட வாய்ப்பில்லை.
ஆனால் இதற்கு மாறாக மரண தீவு ஒன்றுக்கு சென்று உலக மகா கோடீஸ்வரர்கள் மரணத்தை தவிர்க்கும் ஊசியை போட்டுக் கொள்வதாக தகவல் பரவியுள்ளன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவின் ஹோண்டுராஸ் பகுதியில் இருந்து சுமார் 40 மைல் தொலைவில் ரோட்டன் என்ற தீவு அமைந்துள்ளது. இந்த தீவை பிரிக்மேன் என்பவர் உருவாக்கியதாக கூறப்படுகிறது.
ஊசிகள்
இங்கு சட்ட விரோதமாக மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக மரணத்தை தவிர்த்து, வயதை குறைக்கும் ஊசிகள் இங்கு செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 22 லட்ச ரூபாய்ஆகும்.
இந்த ஊசியை ஒரு முறை எடுத்து கொண்டால் இரண்டு ஆண்டுகளுக்கு இதனுடைய தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.