செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க!
செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
செயற்கை இதயம்
நியு சவுத் வேல்ஸை சேர்ந்த 40 வயதுடைய நபருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸில் உள்ள ஜார்ஜஸ் போம்பிடௌ மருத்துவமனையில் BIVACOR என்ற முழு செயற்கை இதயம் பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இவருடைய உடம்புக்கு ஏற்ற இதயம் கிடைக்காததால் அந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. பொதுவாக மனித இதயத்தின் எடை 250 முதல் 350 கிராம் வரை இருக்கும். செயற்கை இதயம் அதைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.அதாவது ஒரு கிலோவுக்கு கொஞ்சம் குறைவான எடையுடன் இருக்கும்.
முதல் மனிதர்
மேலும் செயற்கை இதயத்தில் பிளாஸ்டிக் போன்ற செயற்கை இழைகள் பயன்படுத்தப்படாமல் மாட்டின் திசுக்கள் பயன்படுத்தப்பட்டதால், ரத்தம் உறைந்து கட்டியாவதும் தடுக்கப்படுகிறது.இந்த செயற்கை இதயத்தால், இயற்கை இதயம் கிடைக்கும் வரை ஒருவரின் மரணத்தை தள்ளிப் போடலாம்.
10 ஆண்டுகளாக, தானம் செய்யப்படும் இதயங்களுக்காக காத்திருக்கவோ அல்லது பெறவோ முடியாதவர்களுக்கு இது உதவும்.BiVACOR என்றழைக்கப்படும் மொத்த செயற்கை இதயத்தை குயின்ஸ்லாந்தில் பிறந்த டாக்டர் டேனியல் டிம்ஸ் வடிவமைத்தார்.இதுவே உலகின் முழு செயற்கை இதயமாகும்.