ரூ.1413 கோடி சொத்து, இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ யார் தெரியுமா? - லிஸ்ட் ரெடி!

Indian National Congress BJP India
By Vinothini Jul 21, 2023 06:21 AM GMT
Report

நாட்டின் பணக்காரர் முதல் ஏழை எம்.எல்.ஏ வரையிலான லிஸ்டு ஒன்று வெளியாகியுள்ளது.

எம்.எல்.ஏ-க்கள் சொத்து பட்டியல்

இந்தியாவின் பணக்கார எம்.எல்.ஏ மற்றும் ஏழை எம்.எல்.ஏ-க்கள் குறித்து ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் முதல் பத்து இடங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் நான்கு பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

richest-and-poorest-mla-list

இதில் முதல் இடத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரியான டி.கே. சிவக்குமாரிடம் ரூ.1,413 கோடி சொத்துகள் உள்ளன. இந்த பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பவர் புட்டசாமி கவுடா. சுயேச்சை எம்.எல்.ஏ.வான இவருக்கு ரூ.1,267 கோடி சொத்துகள் உள்ளன. அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரியா கிருஷ்ணாவிடம் ரூ.1,156 கோடி சொத்துகள் உள்ளன.

ஏழை எம்.எல்.ஏ-க்கள்

இதனை தொடர்ந்து, மிக குறைவான சொத்துகளை கொண்ட எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மேற்கு வங்காள பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான நிர்மல் குமார் தாராவிடம் மொத்தம் ரூ.1,700-க்கு குறைவான சொத்துகளே உள்ளன.

richest-and-poorest-mla-list

ஒடிசாவை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ. மகரந்த முதுலியிடம் ரூ.15 ஆயிரமும் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. நரீந்தர் பால் சிங் சாவ்னா என்பவரிடம் ரூ.18,370 சொத்துகளே உள்ளன. நாட்டின் 20 பணக்கார எம்.எல்.ஏ.க்களில் 12 பேர் கர்நாடகாவில் உள்ளனர். தவிரவும் கர்நாடகாவில் 14 சதவீதம் எம்.எல்.ஏ.க்கள், குறைந்தது ரூ.100 கோடி என்ற அளவிலான சொத்துகளுடன் கோடீசுவரர்களாக உள்ளனர்.