பணக்கார பட்டியல்; இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி
உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பணக்கார பட்டியல்
கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், விளம்பர மதிப்புகளும் குவிந்து வருகிறது. இதனால் அவர்களின் மதிப்பு பல நூறு கோடியை தாண்டி அதிகரித்து வருகிறது. இப்படி இருக்கையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணக்கார கிரிக்கெட் பட்டியல் ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த பட்டியலில் விராட் கோலி, தோனி போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் எப்போதும் டாப்பில் இருப்பார்கள். இந்நிலையில் இந்த முறை கில் கிறிஸ்ட் என்கிற ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் பெயர் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 3120 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சச்சின் முதலிடம்
ஆனால் இதில் ஆடம் கில் கிறிஸ்ட் என்ற பெயரிலேயே மற்றொரு தொழிலதிபர் ஒருவர் எஃப் 45 என்ற ஜிம்மை நடத்தி வருகிறார். அவரின் சொத்து மதிப்பு இதில் சேர்த்துள்ளதால் கணக்கு எடுப்பில் தவறு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, இப்பட்டியலில் முதலிடம் பெற்றது ரூ.1400 கோடி சொத்துக்கள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீராக இருந்தாலும் பல விளம்பரங்கள் குவிந்து கொண்டே இருக்கிறது. மேலும் தனிப்பட்ட முறையில் நிறைய நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
2ஆம் இடத்தில் கேப்டன் எம்.எஸ்.தோனி உள்ளார். இவருக்கு பல நிறுவங்கள் விளம்பரங்களுக்கு முதலீடு செய்துள்ளார்கள். 2023ம் ஆண்டின் சொத்து மதிப்பு ரூ.1000 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
இதில் நட்சத்திரவீரர் விராட் கோலிக்கு ரூ.920 கோடி இருப்பதாகவும், 8வது இடத்தில் ரூ.300 கோடியுடன் விரேந்தர். சேவாக் இருக்கிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.